காஞ்சிபுரத்தில் நீதி மற்றும் நிதிசார் தனியார் நிறுவனம் திறப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நீதி மற்றும் நிதிசார் தனியார் நிறுவனம் திறப்பு.
50% வியாபாரம், 50% சமுதாய உதவி செய்யும் நோக்கத்துடன் செயல்படும் என நிர்வாக இயக்குனர் அறிவிப்பு.
காஞ்சிபுரம் காமராஜர் விதியில் ஒன் மேன் குரூப்ஸ் என்ற பெயரில் தனியார் நீதி மற்றும் நிதிசார் நிறுவனம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நிதிசார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் ஐபிஎஸ், மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதி கணேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிறுவனத்தை துவக்கி வைத்தனர்.
நிதி நிறுவன திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை நிர்வாக இயக்குனர் ஹரிஷ் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஹரீஷ் ,
ஓன்மேன் குரூப்ஸ் நிறுவனம், நிதி உதவி ரியல் எஸ்டேட் சட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 50% சதவீதம் வியாபார நோக்கத்தோடும், 50 சதவிகிதம் சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் நோக்கத்தோடும் செயல்படுத்த உள்ளதாகவும்,
பெண்மணிகள் பயன்பெறும் வகையில் டிடிசிபி அனுமதியுடன் கூடிய வீட்டுமனைகளை மாதத் தவணையில் குறைந்த விலைக்கு வழங்க உள்ளதாகவும், மேலும் தேவைப்படும் அனைவருக்கும் சட்டவல்லுனர்கள் மூலம் சட்ட உதவியும், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாக நிர்வாக இயக்குனர் ஹரீஷ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் துணை இயக்குனர் வினோ சார்லஸ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தளபதி, காஞ்சிபுரம் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments