16 பள்ளி மாணவ மாணவிகள் "நிர்வாண பார்ட்டி" - கிளப்பை சுற்றி வளைத்து போலீஸார்
பள்ளி மாணவர்கள் மது போதையில் செக்ஸ் பார்ட்டி நடத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கென்யாவின் கிட்டூவு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் பள்ளி பேருந்தில் வீட்டிற்கு அனுப்பபட்டனர்.
அந்த பள்ளி பேருந்து வழியிலேயே விபத்தில் சிக்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மிக குறைவான மாணவர்களே அங்கு இருந்ததை கண்டு மற்ற மாணவர்கள் என்ன ஆனார்கள் என விசாரிக்க தொடங்கினர்.
இந்நிலையில் சில மாணவர்கள் பாதி வழியிலேயே இறங்கி பார்ட்டிக்கு சென்ற விஷயம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தினர். அதில் மாணவிகள் உள்பட 16 மாணவர்கள் சேர்ந்து ஒரு கிளப்பில் குடி போதையில் பார்ட்டி நடத்தியதை கண்டறிந்தனர்.
இதையடுத்து போலீஸார் கிளப்பை சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யும் போது அவர்கள் நிர்வாணமான நிலையில் இருந்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
No comments
Thank you for your comments