Breaking News

பொது நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும்... மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

வேலூர்:

விடுதிகள் , பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 100 சதுர மீட்டர் பரப்பளவுக்கு குறையாத தனியார் பள்ளிகள் , கல்லூரிகள் , பிற கல்வி நிறுவனங்கள் , திருமண மண்டபங்கள் உணவு மருத்துவமனைகள் , விடுதிகள் , திரையரங்கங்கள் , நூலகங்கள் , கிளப்புகள் மற்றும் இதர நிறுவனங்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் ( உரிமம் ) சட்டம் 1965 - ன் பிரிவு 3 ( 1 ) -ன்படி புது உரிமம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக ஆன் - லைனில் ( இ - சேவை மையம் ) விண்ணப்பிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


பொதுக்கட்டிடங்கள் உரிமம் தொடர்பாக 

1. அங்கீகரிக்கப் பெற்ற கட்டிடப்பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டிட உறுதிச்சான்று ( Structural Soundness Certificate ). 

2. பொதுச் சுகாதாரத் துறையினரிடமிருந்து பெற்ற சுகாதாரச் சான்று ( Sanitary Certificate ) , 

3. உள்ளாட்சி அமைப்பு மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற துறைகளிடமிருந்து பெறப்பட்ட கட்டிட வரைப்படம் ( Building Plan ) , 

4. உரிமக் கட்டணம் ( Prescribed Licence Fees ) செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு 

5. தீயணைப்புத் துறையினரிடமிருந்து பெற்ற தடையில்லாச் சான்று (NOC ) 

ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறும் , ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்படி உரிமத்தை தவறாமல் புதுப்பிக்குமாறும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பொதுக் கட்டிட உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments