Breaking News

வடமாநில தொழிலாளி அடித்து கொலை - 8 பேர் கைது

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் ஒப்பந்தப் பணியாளராக வடமாநில இளைஞர்கள் சிலர் பணியாற்றுவதில்  ஒப்பந்ததாரர்கள் இடையே சிரமம் ஏற்பட்டுள்ளது.


இதனிடையே அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் பேரம்பாக்கம் எம்ஜிஆர் நகரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து 20க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் 15/12/2021அன்று இரவு சுமார் 11 மணி அளவில் நான்கு பேர் உணவு அருந்திக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் வீட்டில் புகுந்து கையில் வைத்திருந்த கட்டை போன்ற ஆயுதங்களால் அவர்களை  சரமாரியாக  தாக்கியதில் மூன்று பேர் பேர் பலத்த காயமடைந்தனர் 

உடனே பக்கத்தில் வசிக்கும் சக இளைஞர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்ததும்  மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர் உடனே சக நண்பர்களை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் ஒருவர் அப்துல்  ஆசிம்  21 வயது இவர் மட்டும் தலையில் பலத்த காயங்களுடன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சிகிச்சை பலனின்றி அப்துள் அசீம் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தொழில் போட்டி காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று திருவள்ளூர் மாவட்ட உதவி  கண்காணிப்பாளர் திரு சந்திரதாசன் அவர்கள் தலைமையில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை  அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்  முக்கிய குற்றவாளியான புதிஷ், பிரபு, தினேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் 8 பேரை வலைவீசி தேடிவந்தனர்.

19/12/21 அன்று எஸ்ஐ இளங்கோ தலைமையில் சிபியோன்(21), திவாகர்(25), ராஜேஷ்(29), தினேஷ்(24), சூர்யா(29), முகேஷ்(24), பிரகாஷ்(19), ஸ்டீபன்ராஜ்(29) ஆகிய எட்டு குற்றவாளிகளை பிடித்து திருத்தணி சிறையில் அடைத்தனர்.

No comments

Thank you for your comments