Breaking News

ஜோஸ் ஆலூக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15.9 கிலோ நகை மீட்பு.. திருடனை காட்டி கொடுத்த ருத்ராட்ச மாலை.. ருசிகர தகவல்..

வேலூர்: 

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மயானத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் பிரபலமான தனியார் நகை கடை. தரைதளம் உட்பட 5 அடுக்குகள் கொண்ட நகை கடையில் தரை தளத்தில் வைரம் மற்றும் தங்க நகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று இரவு நகை கடையை பூட்டிவிட்டு சென்ற ஊழியர்கள் மறுநாள் காலை வந்து கடையை திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. நகை கொள்ளை பற்றி வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கடையின் பின்பக்கம் உள்ள காற்று வெளியேறும் வெண்டிலேட்டர் குழாய் மூலம் கொள்ளையர்கள் தரைதளத்தின் உள்ளே புகுந்து பால் சீலிங்கை உடைத்து குதித்து கொள்ளை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒல்லியான முகமூடி அணிந்த உருவம் ஒன்று கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே அடிப்பது பதிவாகியிருந்தது.

கொள்ளை போன நகை கடைக்கு அருகில் தடையங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டன. கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் ஒரு தலை விக் கண்டெடுக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் வேலூர் சரக டிஐஜி ஏஜி பாபு உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.


கொள்ளை சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்தும், சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்களை வைத்து தேடி வந்தனர். நகைக்கடையில் சேகரிக்கப்பட்ட கைரேகை தடயங்களை வைத்து காவல்துறையினர் பழைய குற்றவாளிகளை ஆராய்ந்து வந்தனர்.மேலும் கடைக்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்தனர்.

அப்போது, மெலிதான உடல் கொண்ட நபர் ஒருவர் தோளில் பையை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து பழைய குற்றவாளிகளின் கைரேகையை போலீசார் ஆராய்ந்தனர். முகமூடி அணிந்த நபரின் உடல் அமைப்பு அணைக்கட்டு, பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன் என்பவரின் உடல் அமைப்பு மற்றும் கைரேகைகளுடன் ஓரளவு ஒத்துப்போனது.

டீக்காராமனை கைதுசெய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நகைகள் திருடப்பட்ட கடைக்கு டிக்காராமை அழைத்துச்சென்ற போலீசார், சிங்க முகமூடியையும் அணிவித்து ஆராய்ந்தனர். 

டீக்காராமனின் தாய், மனைவி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 நகை கொள்ளைபோன பிரபல நகைக்கடை அருகே
 இன்று மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது

ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடித்த நகைகளை   அவர் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நகை கடைக்கு அருகில் உள்ள இடம் உள்ளிட்ட பல இடங்களில் காவல் துறையினர் கடப்பாரை மற்றும் மண்வெட்டி மூலம் தரையை தோண்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் கொள்ளையன் தங்கி இருந்த ஒடுக்கத்தூர் பகுதியிலும் வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையிலான குழுவினர் சோதனையிட்டு வந்தனர். 

அதன் அடிப்படையில் உத்தரகாவேரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் நகைகள் புதைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு தோண்டிப் பார்த்த போது மண்ணில் நகைகள் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 

மேலும் அவை உருக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சுடுகாட்டில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த நகைகளை மீட்ட காவல்துறையினர். வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 திருடனை காட்டி கொடுத்த   ருத்ராட்சை மாலை

நகையை திருடிய நபர் அவ்வளவு நகைகளை சுடுகாட்டில் புதைத்து வைத்து விட்டு  ஒரே ஒரு ருத்திராட்சை மாலை மட்டும் போட்டுள்ளான் விசாரணையில் நான் ஒரு சிவபக்தர் என தெரிவித்துள்ளான் 

அந்த ருத்ராட்சை மாலையில் தான் அவன் கைது செய்யப்பட்டான்...

குவியும் வாழ்த்துக்களும்... பாராட்டுகளும்..

களவுபோன 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 10 கோடி ஆகும். 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை இரவு பகல் என்று பாராமல் சம்பவம் நடந்து ஐந்து நாட்களில் கண்டுபிடித்த தனிப்படையினரை, காவல் துறை இயக்குநர்,  கூடுதல் காவல் துறை இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு, வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்... 

தமிழ்நாட்டு காவல்துறையின் திறமையை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் காவல்துறையினர் நிரூபித்துள்ளனர்... 








No comments

Thank you for your comments