12 எம்பிக்கள் தற்காலிக நீக்கம் விவகாரம் : அரசு அழைப்பை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு
புதுடில்லி, டிச.20-
நாடாளுமன்ற அவை மரபுக்கு விரோதமாக நடந்து கொண்டதாக மாநிலங்களவையில் சேர்ந்த 12 எம்பிக்கள் அவையிலிருந்து குளிர்கால கூட்டத்தொடர் முழுக்க தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவு எடுக்கலாம் என்று அரசு தரப்பில் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார்.
தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 12 எம்பிக்களும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனை, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவர்களுடன் மட்டும் பேச்சு நடத்தலாம் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு அனுப்பியிருந்தார்.
எதிர்க்கட்சிகளைப் பிரித்துப் பார்க்கும் போக்கை அனுமதிக்க முடியாது. எல்லா எதிர்க்கட்சிகளுடன் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால் தாங்கள் வருகிறோம். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிகள் எந்த கட்சிகளை சேர்ந்தவர்களும் அவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்புவதாக இருந்தால் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வர தயாராக இல்லை என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒரு படி மேலே போய், முதலில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 12 எம்பிகளையும் அவையில் அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு எதிர்க்கட்சிகள் வருவோம் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அரசின் அழைப்பை ஏற்க எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டாத காரணத்தினால் அந்த பிரச்சனை அப்படியே அந்தரத்தில் விடப்பட்டது.
அரசுக்கும் எதிர்க்கட்சி களுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால் பேச்சுவார்த்தை என்பது இந்த விஷயத்தில் சாத்தியமில்லை. இந்த முட்டுக்கட்டை நிலை எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது அவை விவாதங்கள் நடைபெற வேண்டும் கண்ணியத்தோடு நடைபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கவலை என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோசம் காரணமாக மாநிலங்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
No comments
Thank you for your comments