ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஞானவேல் !
சென்னை, நவ.22-
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.
ஜெய்பீம் திரைப்படத்தின் ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இதன் பொருட்டு மன உளைச்சல் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திரைப்பட இயக்குநர் ஞானவேல் நேற்று அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.
திரைப்படத்தில் பின்னணியில் காட்சியாகும் ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமேயன்றி குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டுமென்பது யாருடைய நோக்கமும் அல்ல.
ஜெய்பீம் காலண்டரில் இடம் பெற்ற அக்னிசட்டி சர்ச்சைக்கு நானே பொறுப்பு. அந்த காலண்டர் நவம்பர் 2 ம்தேதி படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. அதற்கும் படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் த.செ. ஞானவேல் நேற்று வெளியிட்ட இரண்டு பக்க அறிக்கையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வணக்கம்... pic.twitter.com/HfrGkSGwOh
— Gnanavel (@tjgnan) November 21, 2021




No comments
Thank you for your comments