Breaking News

செல்வமகள் திட்டத்தில் தமிழகம் முதலிடம் - வானதி சீனிவாசன் பெருமை...

கோவை:

கோவை மாவட்டம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 30 பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 த்திற்கான காசோலையை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி-சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார். 

நிகழ்ச்சிக்கு பிறகு,  சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்  செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, 

பிரதமர் மோடியின் செல்வமகள் என்று இந்தத் திட்டத்தில் முதலில் கடந்த ஆண்டு 50 பெண் குழந்தைகள் இணைக்கப்பட்டனர். இந்த 50 குழந்தைகள் இதில் பதிவு செய்து கொண்டனர். 

பதிவு செய்த பெண் குழந்தைகளின் பெயர்களில் வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 5 ஆண்டு காலத்திற்கு பிறகு அந்த குழந்தைகளின் படிப்புக்கு நிதி உதவி அளிக்கவும் தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

எந்த ஒரு திட்டத்தை அமல்படுத்தினாலும் அதை பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் பலனளிக்கும் என்பதை அடிப்படையாக வைத்து இருக்கிறார். 

நாட்டில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக பிரதமர் மோடி அமல்படுத்தினார்.

அவர் கொண்டு வந்த செல்வமகள் திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், நகர்ப்புற பெண்களுக்கு தொழில் தொடங்கவும், கிராமப்புற பெண்களுக்கு கழிப்பிடம், வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


No comments

Thank you for your comments