Breaking News

கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.... உரிமையாளர்கள் தீக்குளிக்க முயற்சி

விருத்தாசலம்:

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு ஆக்கிரமிப்பு  கடைகளை அகற்றும் பணியால் திடீர் சாலை மறியல் செய்த கடைகளின் உரிமையாளர்கள்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி  செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் முன்பு கலை இயக்கத்தை பாதிக்கும் வகையில் இருந்த 12 கடைகளை அரசு முதன்மை செயலாளர் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலைத்துறை அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பிரிவு 87 ன் படி அகற்றிட  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


 உத்தரவின் படி விருத்தாசலம்  விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து உள்ள 12 கடைகள் (ம) ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறை உதவியுடன் அறநிலைத்துறை உதவி ஆணையர் பரணிதரன் செயல் அலுவலர்கள் முத்துராஜா மாலா உள்ளிட்டோர் இன்று ஆக்கிரமைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அப்போது கடையின் உரிமையாளர்கள் பாலக்கரை நான்கு முனை ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி தலைமையில் மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணிக்காக விருத்தாசலம் காவல் துறை சார்பில் காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கன் மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஆறு உதவி ஆய்வாளர்கள் 60 போலீசார் விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் ‌நிலைய அலுவலர் மணி தலைமையில்  அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments

Thank you for your comments