Breaking News

சென்னிமலை ஒன்றியத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

ஈரோடு, நவ.24-

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 23.11.2021 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் சென்னிமலை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,பேரூராட்சிகள், ஊராட்சிகள், மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள்  குறித்து ஆய்வு  கூட்டம் நடைபெற்றுவருகிறது.

உள்ளாட்சி மன்றத்தை பொறுத்தவரை சென்னிமலை வட்டாரத்தில் 22 ஊராட்சிகள்  உள்ளது. சென்னிமலை ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி விநியோகிக்கப் பட்டுவருகிறது. குடிநீர் தேவைப்படும் பகுதிகளுக்கு சீரான மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னிமலை பேரூராட்சி 10 வார்டுகளை கொண்டுள்ளது. சென்னிமலை பேரூராட்சி பெருந்துறை, சென்னிமலை, கருமாண்டி செல்லிபாளையம், பொன்விழா ஆண்டு கூட்டுக்  குடிநீர் திட்டமானது காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டுள்ளது. தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட குடிநீர் அளவு,தேவைப்படும் குடிநீர் அளவு,பெறப்படும் குடிநீர் அளவு, விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு, மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளின் எண்ணிக்கை, தரைமட்ட தொட்டிகளின் எண்ணிக்கை, குடிநீர் வீட்டிணைப்புகள், ஆழ்துளை கிணறுகள் எண்ணிக்கை, பொது கிணறுகள், மின்விசை பம்புகள் உள்ளிட்ட விபரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முருங்கத் தொழுவு ஊராட்சிஒட்டன்குட்டையில் ஏற்கனவே உள்ள கிணற்றில் கூடுதல் மோட்டார் அமைத்து தண்ணீர் எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 

மேலும், சென்னிமலை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டங்கள் எந்தளவிற்கு பராமரிக்கப்பட்டு வருகிறது,செயல்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகளுக்கு கூடுதலாக என்ன அடிப்படை வசதிகள் தேவை, புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்குவதற்கு நீராதாரம் உள்ள பகுதிகளை கண்டறிதல் மற்றும் இதன் மூலம் தடையற்ற குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மற்கொள்ளவேண்டும். 

இக்கூட்டத்தில் பெறப்பட்டகருத்துகள் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் நிதியை பெற்றுவழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தேவைக்கு உடனடிதீர்வு காணப்படும். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் புதிய குடிநீர் திட்டப்பணிகளும் துவங்கப்படவுள்ளது. அனைத்து துறைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் குறித்த கருத்துகளை உடனடியாக செயல்படுத்தும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும். எனவே, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனதெரிவித்தார்கள்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் லி.மதுபாலன்  சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்டஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், தலைமைப் பொறியாளர் செங்குட்டுவன் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,கோவை), மேற்பார்வை பொறியாளர் முரளி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கு.வெங்கடேசன், ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர்.கு.இந்திராணி, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆ.ஆயிஷா, உதவி செயற்பொறியாளர்  (பேரூராட்சிகள்) நாகராஜ் உட்பட அனைத்துதுறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments