சேறும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா ?
அரூர், நவ. 18:
அரூரை அடுத்த கீழானூரில் சேதமடைந்த சாலையை சீரமைப்பு செய்து தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், செல்லம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கீழானூர் காணன்கொட்டாய் கிராமம். இந்த ஊரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் அங்குள்ள ஏரியின் கரைப்பகுதியில் அமைந்துள்ள மண் சாலை வழியாக சென்று வருகின்றனர்.
எனவே, கீழானூர் காணன்கொட்டாய் கிராம மக்கள் பயன்படுத்தும் சேறும் சகதியுமாக உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
உரிமையை உரக்கச்சொல்லும் அப்பகுதி மக்களின் குறைகள் அதிகாரிகளின் செவிகளுக்கு எட்டுமா...? மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா...? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்...
🔏 செய்தியாளர் இளம்பரிதி

No comments
Thank you for your comments