விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை...!
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், பல்லடம், மங்கலம், அவிநாசி, கண்ணம்பாளையம், பெருமாநல்லூர், 63-வேலம்பாளையம், மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரியதைத் தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையிலும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித். கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ். லீலா அலெக்ஸ் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் வ.லீலாவதி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் விரிவாக கேட்டு அறியப்பட்டு இரண்டு மாவட்டங்களின் தொழில் அமைதி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட கூலி உயர்வுடன் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும், பிற ரகங்களுக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு 1.12.2021 முதல் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
🔏 செய்தியாளர் லீலாகிருஷ்ணன்
No comments
Thank you for your comments