குடிநீர் குழாய் அமைக்கும் பணி.... மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு...
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட மீனா எஸ்டேட் 6வது கிராஸ் வீதியில் 24X7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் குழாய் அமைத்த பின்பு சாலை உடனடியாக சீரமைக்கவும் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.59க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, எம்.ஜி.ஆர் வீதியில் 24x7 குடிநீர் திட்டத்தின் கீழ் பகிர்மானக் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.
குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார்கள். அதற்கு குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, குடிநீர் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவற்றைக் குறித்து பரிசோதனை செய்யப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப பரிசோதனை செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் செந்தில்குமார் இரத்தினம், உதவி செயற்பொறியார் சுந்தர்ராஜன், 24x7 உதவி செயற்பொறியார் ராமசாமி,சூயஸ் நிறுவன மேலாளர் முத்துபாபு, உதவி பொறியாளர் எழில் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments