Breaking News

கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 43 லட்சம் ரூபாய் முறைகேடு- அதிமுக தலைவர் உட்பட 4 பேர் கைது

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள  வேளாண்மை  கூட்டுறவு  கடன் சங்கத்தில்  சுமார்  43 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த  முன்னாள் அதிமுக தலைவர் உட்பட  4 பேர்  கைது ...

தருமபுரி மாவட்டம்  அரூர் அருகேயுள்ள மருதிப்பட்டியில்  கீழ்மொரப்பூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2014 முதல் 2019 வரை   சங்க தலைவராக இருந்த அதிமுக வை சேர்ந்த  பார்த்திபன் மற்றும் செயலாளராக பொன்னுசாமி ஆகியோர் இருந்தனர். 

அப்பகுதிகளில் இவர்கள் பயிர் கடன். விவசாய கடன், நகை கடன்  உள்ளிட்ட கடன்களை வழங்காமல், வழங்கியதாக முறைகேடு செய்துள்ளதாக  கூட்டுறவு சங்க துணை பதிவாளர் தருமபுரி மாவட்ட வணிக குற்ற புலணாய்வு பிரிவினருக்கு புகார் அளித்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட  வணிக குற்ற புலணாய்வு பிரிவினர்  இது தொடர்பாக தொடர்ந்து  ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.   

இதில் கடன் வழங்காமல் கடன் வழங்கியதாக 43 லட்சத்து 31 ஆயிரத்து 472 ரூபாயை முறைகேடு  செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து  முறைகேடு செய்த அதிமுகவை சேர்ந்த  கூட்டுறவு சங்க  முன்னாள் தலைவர் பார்த்திபன். சங்க செயலாளர்  பொன்னுசாமி, எழுத்தர்கள்  சிவலிங்கம், கருணாநிதி ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை செய்கின்றனர்.

No comments

Thank you for your comments