மத்திய குழுவினருடன் தலைமை செயலர் ஆலோசனை
சென்னை, நவ.22-
தமிழகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையில் மத்திய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை (21-11-2021) சென்னைக்கு வந்தது.
மத்திய குழுவினருடன், தலைமை செயலர் இறையன்பு நேற்று தலைமை செயலகத்தில் மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய அதிகாரிகள் குழு ஒன்று சென்னை வந்துள்ளது.
மத்திய குழு உறுப்பினர்கள் 2 பிரிவாக பிரிந்து சென்று வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று முதல் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம்
மத்திய அரசின் ஆய்வுக் குழு தலைவர், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (ம) நிதி ஆலோசகர் ராஜூவ் ஷர்மா அவர்களுடன் மழை வெள்ள சேதங்களை குறித்து நேற்று (21.11.2021) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் நிதி (செலவினம்) அமைச்சகத்தின் ஆலோசகர் R.P.கவுல், மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இயக்குநர் விஜய் ராஜ் மோகன், மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்தின் உதவி இயக்குநர் செல்வி பாவ்யா பாண்டே, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் M.V.N. வரபிரசாத், மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் இயக்குநர் ஸி.தங்கமணி, ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மண்டல அலுவலர் இரணஞ்சய் சிங், பொறுப்பு அலுவலர்கள் வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலாளர்குமார் ஜெயந்த், மற்றும் அரசு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments
Thank you for your comments