Breaking News

ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி

ஷார்ஜா : 

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 40 வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 3 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடந்தது.  1100 ஏக்கர் பரப்பளவில் இந்த புத்தக கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் பங்கேற்றன. 

 40 வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் பிராங்பர்ட்க்கு அடுத்த மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி ஆகும். 

ஸ்பெயின் நாடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றது. தினமும் பல்வேறு நூல்கள் வெளியீடு, இலக்கிய சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. 

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மஸ்னவி ஷரீப்பின் ஆறாம் பாகம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டது. கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். 

இந்த புத்தகக் கண்காட்சியில் தமிழக எழுத்தாளர்  சுப்ரபாரதிமணியன்.. ஓவியர் தூரிகை சின்ராஜ் ஆகியோர் புக்கிஷ் பாராட்டு விருது பெற்றனர்.  11/11/21  இரவில் சார்ஜா புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. 

மலையாள எழுத்தாளர்கள் வெள்ளியோடன், ரோசினி ஆகியோர்  சின்ராஜ் வரைந்த 25 அமீரக எழுத்தாளர்கள் ஓவியங்களை அறிமுகம் செய்து பேசினர். பாராட்டு விருதுகள்  வழங்கப்பட்டது. 

வெள்ளியோடனின் பெண்ணாச்சி  நாவலை.. தமிழில் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.. சுப்ரபாரதிமணியன் வெளியிட்டார்.  நசீமா நாவல் குறித்துப் பேசினார். 

கீழ்கண்ட எழுத்தாளர்களுக்கு அவர்களின் ஓவியங்கள் வழங்கப்பட்டன. சின்ராஜின் எழுத்தாளர்கள் ஓவியங்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

கவிஞர் மனுஷ்ய புத்திரன்.. எழுத்தாளர் திருப்பூர் கனவு சுப்ரபாரதிமணியன்.. மேட்டுப்பாளையம் தூரிகை சின்னராஜ் அவர்கள் வரைந்த ஓவியத்தை 25 ஓவியங்கள் அமீரகத்தில் வாழும் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சியில் ரைட்டர்ஸ் பாரம் அரங்கில் கவனம் பெற்றன.  

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் அரபு மொழியில் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்.. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பும் புறக்கணிப்பும் செய்தன. 

துபாய் எக்ஸ்போவில் மாமல்லபுரம் சிற்பங்கள்.. தஞ்சை பெரிய கோவில் குறித்து வீடியோக்களும் படங்களும் கலைப்பிரிவில் அடுர் கோபாலகிருஷ்ணன் குறித்த சிறப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்தன.


🔏 செய்தியாளர் சிந்து சீனு

No comments

Thank you for your comments