தேசிய பத்திரிக்கை தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த நே.ஜ.யூ. தலைவர் டாக்டர் கா.குமார்...
சென்னை:
பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிக்கை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் டாக்டர் கா. குமார்.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தியாக தீபங்களின் நினைவுகள்
உண்மை, உரிமை,
எளியோர் உடமை காக்க
தந்திர உலகில் சுதந்திரம் வேண்டி,
எரியும் தனலாய் தங்களை ஈந்த
இன்னுயிர்களின் தியாக தினமாம்
தேசிய பத்திரிக்கை தினம்!
தினம் தினம் மாண்டு பிழைக்கும்
எம் சக ஊடக உறவுகளே,
நின் தியாக தினங்கள்
ரத்த குளியல்,
பணியில் எங்கும் அபாய சூழல்,
மாறிடும், மாறிடும்,
இந்நிலை யாவும்,
மாற்றிக்காட்டிடும் என்.ஜே.யூ.,
இன்னுயிர் நீத்த யாவரின்
நீங்கா நினைவுகளுடன்..!
அனைவருக்கும்
தேசிய பத்திரிக்கை
தின நல்வாழ்த்துக்கள்
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments