Breaking News

அருள்மிகுஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருள்மிகுஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்  கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை விவேகானந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மூலவர் அம்பாள் மற்றும் விமானங்களுக்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும்மான க.சுந்தர் அன்னதானம் வழங்கினார். 

இவ்விழா ஏற்பாட்டினை திமுக மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் மற்றும்  அம்மன் பில்டர்ஸ் நிர்வாகத்தினர் தாஸ் மற்றும் பாபு ஏற்பாடு செய்திருந்தனர். 

இதில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,செவிலிமேடு மோகன்,ராமசந்திரன்,சக்தி சுரேஷ்,ஸ்ரீவாரி பில்டர்ஸ் நித்யானந்தன்,இளையராஜா உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments