வாலாஜாபாத் ஒன்றியக்குழு துணைத் தலைவராக பி.சேகர் போட்டியின்றி தேர்வு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தேவேந்திரன் சஞ்சய்காந்தி ஆகிய இரு பிரிவினர் இடையே போட்டி ஏற்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் இரு தரப்பினரிடையேயும் வேட்பு மனுக்களை பெற்று தேர்தலை நடத்தினார்.
ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தேவேந்திரன் அதிமுக,பாமக, சுயேட்சை, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவுடன் 17 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் காந்தி 4 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அதிமுக பாமக சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது வாலாஜாபாத் ஒன்றியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கான ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் வாலாஜாபாத் பி.சேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


No comments
Thank you for your comments