Breaking News

அதிமுக,பாமக, சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்த தேவேந்திரன் ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

நடைபெற்ற ஊரக உள்ளாட்சி பதிவிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 15 பேரும்,கூட்டணிக் கட்சியான காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்று இருந்தனர்.

மேலும் அதிமுக சார்பில் 2 பேரும், பாமக சார்பில் ஒருவரும், சுயேச்சைகளாக இருவரும் என  21 ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்று இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி ஒன்றியக்குழு தலைவருக்கானதேர்தல் நடைபெற இருந்த நிலையில் திமுகவை சேர்ந்த தேவேந்திரன்,சஞ்சய் காந்தி  ஆகிய  இருவர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

திமுகவைச் சேர்ந்த இருதரப்பினரிடையே  போட்டி ஏற்பட்டதால் தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் மீண்டும் தேவேந்திரன் சஞ்சய்காந்தி ஆகிய இரு பிரிவினர் இடையே போட்டி ஏற்பட்டது.


இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் இரு தரப்பினரிடையேயும் வேட்பு மனுக்களை பெற்று தேர்தலை நடத்தினார்.

ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தேவேந்திரன் அதிமுக,பாமக, சுயேட்சை, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவுடன் 17 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் காந்தி 4 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அதிமுக பாமக சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது வாலாஜாபாத் ஒன்றியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றிய குழு தலைவர் தேர்தலையொட்டி வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

No comments

Thank you for your comments