பகலில் மலிவு விலை கடை.... இரவில் பார் மற்றும் மாட்டு கொட்டகையாக மாறிய அவலம்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் உள்ள அம்பத்தூர் அடுத்த வெள்ளானூர் ஊராட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு மலிவு விலை கடையை கட்டி மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறுகின்றனர்.
ஆனால் தற்போது இரவு நேரங்களில் குடிமகன்கள் குடிக்கும் இடமாக மாறியுள்ளன. அதுமட்டுமின்றி அங்கு மாடுகளை கட்டியும் அசுத்தமாக உள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் புழு பூச்சிகளும் அதிகளவில் இருக்கிறது. மழைகாலம் என்பதால் மழை நீரில் மாட்டு சாணம் கலந்து அந்த பகுதி முழுவதும் சகதியாக உள்ளது.
சுத்தம் சுகாதாரமாக இருக்கவேண்டிய மலிவு விலை கடை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அங்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து பொருட்களை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையை அறிந்து, வில்லிவாக்கம் ஊராட்சியில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... அதிகாரிகளின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்...


No comments
Thank you for your comments