ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1,500 பேருக்கு பணி நியமனம் !
நாமக்கல், நவ.29-
தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் சாா்பில் நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரத்தில் 1,500 பேருக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் சாா்பில், மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மல்லசமுத்திரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், ஆட்கள் தேவைப்படும் 72-க்கும் மேற்பட்ட தனியாா் தொழில்நிறுவனங்கள் கலந்துகொண்டன. வேலைவாய்ப்பு பெறுவதற்காக சுமார் 3,000ககும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
கல்வித்தகுதிகளின் அடிப்படையில் சுமாா் 1,500 போ் பல்வேறு நிறுவனங்களால் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் சின்ராஜ் , திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு உதவி திட்ட அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.
போதுமான விளம்பரங்கள் செய்திருப்பின் வேலைவாய்ப்பு அற்ற பலருக்கு இந்த முகாம் உபயோகமாக இருந்திருக்கும் என்றனர் முகாமை தவறவிட்ட பலரும்.

No comments
Thank you for your comments