காட்பாடியில் கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்பு துறையினர்
வேலூர் :
வேலூர் காட்பாடி அடுத்த ஏடிஜி நகர் பகுதியில் இன்று அப்பகுதியில் பராமரிப்பின்றி இருந்த கிணற்றில் மேய்ச்சலுக்காக வந்த பசு மாடு ஒன்று தவறி விழுந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அருகில் உள்ள காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் .
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.
மேலும் தற்பொழுது மழைக்காலங்கள் என்பதால் பொதுமக்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் வீட்டில் வைத்து பராமரிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments
Thank you for your comments