Breaking News

கன்சால் பேட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வேலூர்:

07.11.2021 அன்று வேலூர் வட்டம் கன்சால் பேட் பகுதியில் உள்ள கால்வாய் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அப்பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது என்று வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் தண்ணீர் புகுந்த வீடுகளில் உள்ள மக்களை உடனடியாக அருகில் உள்ள பள்ளிக்கு செல்லு மாறும் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யுமாறும் வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

மேலும் அப்பகுதியில் உள்ள தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் உடனடியாக வெளியேற்றவும் அப்பகுதியில் தண்ணீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக ஜேசிபி மூலம் உடைத்து தண்ணீர் தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பொய்கை மோட்டூர் பகுதியிலுள்ள கால்வாயை ஆய்வு செய்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க மணல் மூட்டைகள் மூலம் தடுப்பணை அமைத்து மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்   உத்தரவிட்டார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர், வேலூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.

No comments

Thank you for your comments