தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள்
புதுக்கோட்டை:
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிலெட்,நெட், பிஎச்டி முடித்த ஆசிரியர்களை கல்லூரி உதவிப் பேராசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் மற்றும் செய்தித்தொடர்பாளர் கு.தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது,
1. பதினொன்று மற்றும் பண்ணிரென்டாம் வகுப்ப சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சத்துணவு திட்டம் என்ற பெயர் சூட்ட வேண்டும்.
2. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டுதல்.
3. அறிஞர் அண்ணா காலத்தில் கொண்டுவரப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு அதே முறைப்படி தொடர்வதற்கு ஏதுவாக புதிதாக வெளியிட்டுள்ள அரசாணையை திருத்தம் செய்து பழைய முறைப்படி வெளியிட வேண்டும்.
4. தொடக்க கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் ஈர்த்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் முதுகலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உரிய விதித் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
5. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்ட கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
6. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிலெட்,நெட், பிஎச்டி முடித்த ஆசிரியர்களை கல்லூரி உதவிப் பேராசிரியராக நியமனம் செய்ய வேண்டும்.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாவட்டத் தலைவர் ராஜாங்கம், மாநில சட்ட ஆலோசகர் ராஜா, செயலாளர் நாயகம், பொருளாளர் செந்தில் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் முகேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், மகளிர் அணி செயலாளர் நாக லெட்சுமி, செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, கல்வி மாவட்ட பொருளாளர் ஜோதி பாசு, திருச்சி மாவட்ட செயலாளர் உதுமான் அலி, புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தலைவர் எஸ்.செந்தில்குமார், கல்வி மாவட்ட செய்தி தொடர்பாளர் வீரமணி, தஞ்சை மாவட்ட பொருளாளர் கலைஞர், கெளர விரிவுரையாளர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் ஆர்.பிச்சை முத்து. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments