கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு-பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
வேலூர், நவ.8-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையானது 11.50மீ உயரத்திற்கு நீரை சேமித்து வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கிவைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோர்தானா அணையானது தற்போது தனது முழு கொள்ளளவான 11.50 மீட்டரை அடைந்து உபரி நீர் கவுண்டன்ய ஆற்றின் வழியாக வெளியேறிவருகிறது.
மேலும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கவுண்டன்ய ஆற்றில் மூலம் மோர்தானா அணைக்கு நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் மோர்தானா அணை முழு கொள்ளளவினை எட்டி உபரிநீர் வெளியேறி வருகின்ற காரணத்தால், கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோர்தானா, கொட்டார மடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, ஆண்டகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூர், முங்கப்பட்டு, சீவூர், குடியாத்தம் நகரம், இந்திராநகர், ஒலக்காசி, சித்தாத்தூர் மற்றும் ஐதர்புரம் கிராமங்களில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், கவுண்டன்ய ஆற்றில் எந்நேரமும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், கவுண்டன்ய ஆற்றில் குளிப்பது மற்றும் துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும், மேற்படி கவுண்டன்ய ஆற்றில் சிறுவர்களை குளிக்கவோ அல்லது விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது எனவும்
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அனைத்து ஏரி, குளம், குட்டை ஆகியவை முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளன. மேலும் வேலூர் மாவட்டத்தில் பாயும் பாலாறு மற்றும் பொன்னையாறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை வெளியில் சென்று நீர் நிலைகளில் குளிக்க அனுமதிக்கக்வுடாது. மேலும் பெற்றோர்களின் தொடர் கண் காணிப்பிலேயே பிள்ளைகள் இருக்க வேண்டும்.
குறிப்பாக சிறுவர்கள் யாரும் ஆறு, கால்வாய், ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் மழைபாதிப்பு தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்க ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்துகீழ் கண்ட எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :
மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண். “1077” மற்றும் 0416-2258016, வாட்ஸ் அப் எண்.9384056214

No comments
Thank you for your comments