Breaking News

முழுமையாக செயல்படாத இ-சேவை மையம்... பொதுமக்கள் பெரும் அவதி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் நாடு அரசு பொது இ-சேவை மையம் அமைந்துள்ளது.

இந்த மையத்தில் இ.சேவை மையத்தில் வாக்காளர் அட்டை புதுப்பித்தல், புதிய வாக்காளர் அட்டை மற்றும் காணாமல் போன வாக்காளர் அட்டை, பெயர் திருத்தம், முகவரி திருத்தம் அனைத்து சேவைக்காகவும் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த பொது மக்கள் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்   வருகை தருகின்றனர்.

தற்பொழுது தமிழகத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில் இந்த இ-சேவை மையத்தில் 15 நாட்களாக வாக்காளர் அடையாள அட்டை சேவை செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் வாக்காளர் அட்டை பெயர் திருத்தம், புதிய வாக்காளர் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை முகவரி திருத்தம் உள்ளிட்ட வாக்காளர் அட்டை தொடர்பான பணிகள் 15 நாட்களாக செய்யப்படாமல் பொது மக்கள் திருப்பி அனுப்படுகின்றனர்.

இங்கு செல்லும் மக்கள் தனியார் சேவை மையத்திற்கு செல்லுங்கள் என்று திருப்பி அனுப்படுகின்றனர். மேலும் இந்த இ-சேவை மையத்தில் ஆதார் கார்டு தொடர்பான பணிகள் மட்டுமே செய்யப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கில் குவியும் மக்கள் மிகுந்த அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர்.

மக்கள் நலன் கருதி இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ktamilnews




No comments

Thank you for your comments