முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் திருநாவுக்கரசு நினைவு நாளையொட்டி அன்னதானம்
காஞ்சிபுரம்:
முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் திருநாவுக்கரசு பதினேழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் திருநாவுக்கரசு அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாளையொட்டி காஞ்சிபுரம் நடுதெரு பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளர்கள் மைதிலி திருநாவுக்கரசு வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் கழக அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர் டி சேகர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கோல்ட் ரவி, நகர செயலாளர் எம் .பி. ஸ்டாலின், கூட்டுறவு சங்க தலைவர்கள் விஸ்வநாதன், வாசு,நகர பொருளாளர் ராஜசிம்மன்,நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் தமின் அன்சாரி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ktamilnews
No comments
Thank you for your comments