பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, நவ.22-
ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வீரப்பன்சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மகளிரணி மாவட்ட தலைவி புனிதம் ஐயப்பன் ஆகியோர் தலைமை ஏற்றனர்.தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் வடக்கு மாவட்ட தலைவர் அஜித் குமார் ஆகியோர் முன்னிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டார்.
மேலும் மகளிரணி மாநில துணைத் தலைவி சிவசங்கரி, வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சசி தயாளன், வடக்கு மாவட்ட மகளிரணி தலைவி கோகிலா அஜித் குமார் மற்றும் மாவட்ட மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ktamilnews
No comments
Thank you for your comments