குடும்ப அரசியலுக்கு எதிரான கட்சி பாஜக -திருப்பூரில் ஜே.பி. நட்டா பரபரப்பு பேச்சு
திருப்பூர், நவ.24-
பெரும்பாலான மாநிலங்களில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிரானது பா.ஜ.க., என ஜே.பி.நட்டா பேசினார்.
திருப்பூர் இன்று பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, திருப்பூரில் பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் ஜே.பி.நட்டா.
கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜே.பி.நட்டாவிற்கு பா.ஜ.க தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
பின்னர், திருப்பூரில் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார்.
அப்போது வீரவேல், வெற்றி வேல் கோஷத்துடன் தனது உரையை தொடங்கிய அவர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசினார்.
பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
அண்ணாமலை எனர்ஜிடிக் தலைவர். உயர்ந்த கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு. தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் என சுதந்திர போராட்டத்தில் பலர் தமிழகத்தில் இருந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிர் நீத்துள்ளனர். அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் எனது வணக்கங்கள்.
திமுகவின் நடவடிக்கை குறித்து பேசினீர்கள். திமுக என்றால் ஊழல்... குடும்ப உறுப்பினர்களை கொண்ட கட்சி. பெரும்பாலான மாநிலங்களில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிரானது பா.ஜ.க., ஜனநாயக கட்சி பா.ஜ.க., தமிழ் கலாச்சாரம் உலக அரங்கில் உள்ளது.விபூதி, ஆசிர்வாதம் பெறக்கூடாது என தி.க., சொல்கிறது. ஆனால் வெற்றிவேல் அதனை முறியடித்தது.
தமிழ் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற திமுக முயற்சித்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ,தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், பாரதிய ஜனதா கட்சி என்றும் துணை நிற்கும்
1.3 பில்லியன் மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற பிரதமர் போராடி வருகிறார். உலக அரசியலில் இந்தியா உயர்ந்து நிற்கிறது. ஏழை எளிய மக்கள் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட கூடாது என பிரதமர் பாடுபடுகிறார்.மோடியை எதிர்ப்பவர்கள் தேசத்தை எதிர்க்கிறார்கள்.ஏராளமான வசதிகள் விவசாய துறைக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விவசாய உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யுங்கள். 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் கொரோனா காலத்தில் கடுமையாக போராடி உள்ளனர். எந்த ஒரு மனிதனையும் பசியோடு உறங்க விடவில்லை. மருந்தில்லாமல் உறங்க விடவில்லை. கடுமையாக பா.ஜ.க.வினர் பணியாற்றி உள்ளனர். ஆனால் கொரோனா காலத்தில் திமுக தனிமை படுத்திக் கொண்டுள்ளது. கணினி முன்பு அமர்ந்து கொண்டுள்ளது.முன்பு கருணாநிதி வெள்ள தண்ணீரில் நின்று போஸ் கொடுத்தார்.
தற்போது ஸ்டாலின் வெள்ளத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நீங்கள் பாக்கியசாலி. அதனால் தான் பா.ஜ.க.வில் உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
No comments
Thank you for your comments