திமுக சார்பில் வேட்பு மனு தாக்கள் தொடக்கம்...
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் விடுபட்ட மாநகராட்சிகள், நகரட்சிகள், பேரூராட்சிளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது அடுத்த மாதம் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க தேர்தலானது விரைவில் நடைபெறவுள்ளது.
இதனடைய கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திமுக தலைமை கழகத்திலிருந்து தேர்தலுக்கான விருப்ப மனுவை போட்டியிடும் திமுகவினர் மாவட்ட கழகத்திடம் பெற்று கொள்ளும்படி அறிவித்ததையெடுத்து இன்றைய தினம் (24-11-2021) புதன்கிழமை காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகை(மாவட்ட கழக அலுவலகத்தில்) காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் தலைமையில் விருப்ப மனுக்களை பெற்று அதனை தொடங்கி வைத்தார்.
பின்பு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சி,உத்திரமேரூர், வாலாஜாபாத்,உள்ளிட்ட பேரூராட்சிகளை சேர்ந்த மாநகர-பேரூர் மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக போட்டியாளர்கள் தனது விருப்ப மனுவினை திமுக பொறுப்பாளர்களிடம் மாநகர உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 10 ஆயிரமும்,நகராட்சி மன்ற உறுப்பினருக்கு ரூபாய் 5 ஆயிரமும் பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு ரூபாய் 2 ஆயிரத்து ஐந்நூறாகவும் திமுக தலைமை கழகத்தால் நிர்ணயித்தையெடுத்து வழங்கினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் விருப்ப மனுவை மாநகர மன்ற உறுப்பினர் போட்டியாளர்கள் விருப்ப மனு வழங்கினர்.
20வது வார்டு மாநகர உறுப்பினருக்கு போட்டியிடுவதற்க்கு விருப்ப மனு அளித்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கமருன்னிசா ஜாபர் அவர்கள் திமுக பொறுப்பாளர்கள் டி.குமார்,வெங்கடேசன் உள்ளிட்டோரிடம் விருப்ப மனுவை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் கே.ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர அவைத்தலைவர் சந்துரு,ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார்,கெ.ஞானசேகரன்,பி.சேகர்,க.குமணன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், நகர துணை செயலாளர் ஜெகன்நாதன், இளைஞரணி யுவராஜ்,அம்மன் பில்டர் தாஸ்,பாபு, வட்ட கழக செயலாளர் காசிம்பாஷா, தேவராஜ்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பொறுப்பாளர் அப்துல் ஷுக்கூர் மற்றும் நகர கழக வட்ட கழக நிர்வாகிகள் வட்ட இளைஞரணி மாணவரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments