Breaking News

தக்காளி விலை உயர்வு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை

தமிழகத்தில் தொடர்ந்து தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து வீடியோ கான்பிரஸ்சிங்கில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பத்து பதினைந்து, நாட்களுக்கு முன்னர் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோ 150 தை தாண்டி விட்டது. பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயில் வாங்கி விடலாம். தக்காளி வாங்குவது இருக்கட்டும். எங்கே விற்கிறது என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை.

கிலோ 100 ரூபாய் விற்கும்போதே அரசு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். இப்போது தங்கம், பெட்ரோல் போல தக்காளி குறித்து தினசரி விலை நிலவரம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் எல்லா சமூகவலைதளங்களிலும் தக்காளி மீம்ஸ் தான் ஹை லைட். ஒரு காலத்தில் தமிழக அரசியலை கலக்கிக்கொண்டிருந்தது அரிசி, அதன் பிறகு வெங்காயம், இப்போது தக்காளி.

பசுமைப் பண்ணைக் கடைகளில் இனி தக்காளி கிலோ ரூ. 85 முதல் 100 ரூபாய் வரை மலிவாக கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்திருக்கிறார்.

ரிளையன்ஸ்பிரசில் சில நாட்களுக்கு முன்பு கிலோ 74 ரூபாய்க்கு கிடைத்தது.

இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

வீடியோ கான்பிரஸ்சிங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் மழை வெள்ள பாதிப்பு, சேத விபரங்கள், மனித உயிரிழப்பு, கால்நடைகள் இழப்புகள் குறித்து பேசப்படும் என்று தெரிகிறது.

அதை விட முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியது, தக்காளி விலை விவகாரம் தான். இல்லையேல் அடுத்தது, ஆந்திராவில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் விலை எக்குத்தப்பாக ஏறி விடும் என்று ஆளுவோருக்கு சொல்லத்தேவையில்லை.

No comments

Thank you for your comments