Breaking News

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு முகாம்...

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி தொடர்பான  விழிப்புணர்வு  முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.

 பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,

இல்லம் தேடி கல்வி திட்டமானது மாணவ மாணவியர்களை அவர்கள் வசிப்பிடம் அருகே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது. 

 திட்டத்தின் அடிப்படையில் இக்கல்வியாண்டில் 6 மாத காலத்திற்கு, வாரத்திற்கு 6 மணி நேரம் தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாகப் பங்கேற்க செய்யப்படஉள்ளது.

இத்திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக் குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக . நடத்தப்படவுள்ளன.

வீதிநாடகம், பொம்மலாட்டம், கதைசொல்லுதல், திறன்  மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி   கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இவ்விழிப்புணர்வு முகாமானது மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டார அளவில் பொதுமக்கள் பெற்றோர்கள், தன்னார்வாலர்கள், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரிடையாகச் சென்று ஒரு நாளைக்கு 2 பள்ளிகள், 2 கிராமங்கள் என மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற 6 கலைஞர்களைக் கொண்ட குழு 35 நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தினை நோக்கத்தினைப் புரிந்து கொண்டு அனைத்துத் தரப்பு  மக்களும் இத்திட்டத்தினை ஆதரித்து  நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட கைகோத்திட வேண்டும் என மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments