உலக நீரிழிவு (சர்க்கரை) நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
ஈரோடு:
உலக நீரிழிவு (சர்க்கரை) நோய் தினத்தை முன்னிட்டு ஈரோடு Dr.மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியானது ஈரோடு குமலான்குட்டை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு Dr.மோகன்’ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவர் Dr.K.M.ஜிதேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாரதி வித்யா பவன் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக அரிமா சங்க மண்டல தலைவர் Dr. தமிழ்செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு அரிமா சங்க தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு Dr.மோகன்’ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவர் Dr.K.M.ஜிதேந்திரன் அவர்கள் உரையாற்றினார், அதில் நீரிழிவு நோய் பொதுவாக மூன்று வகைப்படும் என்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமும் சீரான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நாம் ஆரோக்கியமாக வாழலாம் மற்றும் நீரிழிவு நோய் வராமலும் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



No comments
Thank you for your comments