பாரத பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித்தொகைக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் தேர்வு
கோவை :
கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் முனைவர் பட்டப் படிப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாண்டுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித் தொகையானது கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பத்தைச் சார்ந்த செல்வன் பிரதீப் மற்றும் செல்வி சண்முகப்பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித் தொகையனது "ஆளில்லா விமானம் மூலம் நானோ உர உருவாக்கம் - பயிர்களினூடே ஊடுருவி செலுத்தும் முறை" மற்றும் "தாவர நூற்புழு பூஞ்சை நோய்க்கிருமிகளை நிர்வகிக்க நானோ உயிர் கலப்பின நோய்க்கிருமிகளை பயன்படுத்துதல்" ஆகிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இவ்வாறு தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாணவர்களும் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் கீ.செ. சுப்ரமணியன், நானோ தொழில்நுட்பத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் அ.லக்ஷ்மணன் ஆகியோரின் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments