Breaking News

பெட்ரோல் டீசல் விலை உயர்வு : பாஜக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து  காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் பாஜக இளைஞரணி சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்த பிறகும் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என அறிவித்த தமிழக அரசு தற்போது வரை பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்பதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அந்தவகையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரிய தூண் அருகே காஞ்சி பாஜக இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் தமிழக பிஜேபி மாநில இளைஞரணி தலைவர் பார்த்திபன் ரவீந்திரன் தலைமையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் தமிழக அரசை எதிரான கோஷங்களை எழுப்பி தேர்தல் வாக்குறுதிகளில் பெட்ரோல் விலையை குறைப்பதாக கூறி பொய்யான வாக்குறுதியை சொல்லி வெற்றி பெற்றதை திமுக அரசை கண்டித்தும் தமிழகத்தில் வாட்  வரியை ரத்து செய்யாமல் மக்கள் மீது கடுமையான சும்மையை சுமத்தி வருவதை கண்டித்தும் அதனை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments