இடுகாட்டில் இறுதி சடங்கு செய்ய முடியாத அவலம்..!
வேலூர், நவ.22-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவள்ளூர் நகர் பகுதியில் இடுகாடு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இடுகாட்டில் இறுதி சடங்கு செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவள்ளூர் நகர் பகுதியில் இடுகாடு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இடுக்காட்டுக்குள் கடல்போல் தண்ணீர் தேங்கி உள்ளது.
கடந்த சில நாட்களில் கிராமத்தில் இறந்துவர்களின் உடலை இடுகாட்டில் உடலை புதைப்பதற்காக குழி வெட்ட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இறுதி சடங்கு செய்து, உடலை புதைப்பதற்கு முடியாத கடினமான சூழ்நிலை நிலவுகிறது.
அதனால் கடந்த நாட்களாக உயிர்நீத்தவர்கள் உடலை, வேலூர் பாலாற்றங்கரை ஓரம் உள்ள தகன மேடைக்கு எடுத்துச் சென்று சவத்தை எரித்தனர் அப்பகுதி மக்கள்.
இதுவரை எங்கள் கிராமத்தில் இதுபோன்று நடந்ததில்லை, இடு காட்டுக்குள் மழை நீர் கடல் போல் காட்சியளிக்கின்றது என்று வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இடுகாட்டில் உள்ள தண்ணீரை வெளியே எடுத்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் கிராம நிர்வாகத்தை சார்ந்த நாட்டாண்மைதாரர்கள் கே.குமரேசன், டி.என்.ஜெயகாந்தன், தர்மகர்த்தா என்.தமிழரசன், செயலாளர் எஸ்.பாலாஜி, பொருளாளர் இ.சுரேஷ், தலைவர் எம்.விஜி மற்றும் கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments
Thank you for your comments