சாலை துண்டிப்பால் வாழ்வாதாரம் இழந்த மீனவர்கள்
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை சாலை கடல் அரிப்புக் காரணமாக சேதமடைந்து, முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் கடற்கரை சாலை வழியாக இயங்கி வந்த போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளம் துறை சங்குதுறை பீச் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் தொழிலுக்காக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்ல முடியாமல் சாலை துண்டிப்பால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்ததும் கண்டுகொள்ளாமல் எந்த வித நடவடிக்கை அதிகாரிகள் எடுக்கவில்லை என்று ஊர் மக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா.. மக்களின் வேதனை செவிகளுக்கு எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  
No comments
Thank you for your comments