Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர், எஸ்.பி., நேரில் ஆய்வு...!

காஞ்சிபுரம்:

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பொழிந்ததின் காரணமாக செய்யாறு மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம் உள்ள பெரும்பாக்கம், ஓரிக்கை , செவிலிமேடு மற்றும் வாலாஜாபாத் ஆகிய இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.ஆர்த்தி,  மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். 

காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆற்றின் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க அறிவுறுத்தியதுடன், பொதுமக்கள் ஆற்றினை பார்வையிடவோ, தரைப்பாலம் வழியாக ஆற்றினை கடக்கவோ கூடாது என அன்பான வேண்டுகோள் விடுத்தார்.



No comments

Thank you for your comments