வெள்ள பாதிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு....
காஞ்சிபுரம்,நவ.20:
வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் பாய்ந்து சென்றதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக வாலாஜாபாத் பாலாற்றில் உள்ள வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் நீரில் மூழ்கிய தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாலாற்று வெள்ள நீர் வாலாஜாபாத் நகருக்குள் வந்து குடியிருப்புகள் பேருந்துநிலையம் அரசுப்பள்ளி உள்ளிட்டவைகளில் தண்ணீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டது மேலும் வில்லிவலம் கிராமத்தில் பாலாற்றில் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டனர்.
நிலையில் வாலாஜாபாத் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து அறிந்து தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாலாஜாபாத் பகுதிக்கு வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாலாறு வேகவதி ஆறு செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடமான திருமுக்கூடல் பகுதியில் வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது,
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பாக வந்ததாகவும்,இவ்வளவு பெரிய வெள்ளம் வந்ததற்கு பிறகு இன்றைக்கு காஞ்சிபுரம் பகுதியில் பெரும்பாக்கம், விஷார், செவிலிமேடு, ஓரிக்கை போன்ற ஆற்றங்கரையோரம் கிராமங்களிலும், அதைப்போல் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் மற்றும் வில்லிவலம். சீயமங்கலம், ஓட்டிவாக்கம், புளியம்பாக்கம் போன்ற கிராமப்புறங்களின் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
இதில் கிட்டத்தட்ட 679 நபர்களை காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி பாதுகாப்பாக மாவட்ட நிர்வாகம் தங்க வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கரையோரப் பகுதிகளில் கிட்டத்தட்ட 137 ஆடு,மாடு, போன்ற கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.பொருட்களை இழந்த மக்களுக்கு நிச்சயமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பாலாற்றின் கரையில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாலாஜாபாத் பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் வந்துள்ளது. காரணம் என்னவென்றால் ஆற்றில் நீர் அதிகமாக வருவதால், மிகை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அதை சரிசெய்வதாக தெரிவித்துள்ளார்கள். தற்போது பெரிய அளவில் சேதம் இல்லை. இருந்தாலும் இது வரலாறு காணாத மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன், திமுக பேரூர் செயலாளர் என்.பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பி.சேகர்,டி.குமார், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி, திருப்போரூர் ஒன்றிய தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன்,பைய்யனூர் சேகர், விக்டர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments