Breaking News

விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு அறிவிப்பு... அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு

கோவை:

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அர்ஜுன் சம்பத் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



கடந்த 7ஆம் தேதி இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 1001 வழங்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கோவை மாநகரக் காவல் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

இந்து மக்கள் கட்சி தமிழக நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியை  உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவானது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. 

எனவே இது தொடர்பாக பி1 கடைவீதி காவல் நிலைய குற்ற எண்- 633/2021, U/s 504, 506 (i) IPC ன் படி அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கமிஷனர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments

Thank you for your comments