காஞ்சிபுரத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்
காஞ்சபுரம், நவ.20-
காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதமும்,எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோஷங்களும் எழுப்பினார்கள்.
வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்தக்கூடாது, பதவி உயர்வு வழங்க வலியுறுத்துவது, தாய்,சேய் நலப்பணிகள் பாதிக்காத வகையில் சனிக்கிழமை மட்டும் தடுப்பூசி முகாம்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் கிராம சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பவானி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஜி.பிரேமா,மாவட்ட பொருளாளர் தாட்சாயணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோரிக்கைகளை விளக்கி மாநில தலைவர் அமுதவல்லி,மாநில இணைச் செயலாளர் மகாலெட்சுமி ஆகியோர் பேசினார்கள்.உண்ணாவிரதத்தின் போது கோரிக்கைகளை விளக்கி கோஷங்களையும் எழுப்பினார்கள்.
படவிளக்கம்..காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட கிராம சுகாதார செவிலியர்கள்
No comments
Thank you for your comments