Breaking News

தயார் நிலையில் நகைகடன் தள்ளுபடி பட்டியல்கள்.... அமைச்சர் இ.பெரியசாமி.

ஸ்ரீபெரும்புதூர், நவ.20: 

தங்கநகை கடன் தள்ளுபடி குறித்த பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது விரைவில் பயனாளிகளுக்கு தங்க நகைகள் வழங்கப்படும் என படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் சனிக்கிழமை  நடைபெற்ற  68ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி  தெரிவித்தார். 

மாநில அளவிலான 68ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் கூடுதல் பதிவாளர் மாதவன் வரவேற்புரையாற்றினார். இதில்  கூட்டுறவுச்சுறை  அமைச்சர் இ.பெரியசாமி, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்ஆகியோர் கலந்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினர். 

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில்,

இந்தியாவில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் சேவைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, ஒவ்வொரு வருடமும் இந்திய திருநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால்நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு கூட்டுறவு வாரவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  


மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட  நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்,  நகர கூட்டுறவு  சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள் என பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு தேவையான கடன்கள் மற்றும் சேவைகள் வழங்கி வருகின்றன. 



இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற மகளிர் சுய உதவி குழு கடன்கள்,  விவசாயக் கடன்கள் மற்றும் தங்கநகை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த 5 சவரன் தங்கநகை கடன் தள்ளுபடி குறித்த பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் எவ்வித முறைகேடும் இன்றி பயனாளிகளின் வீடு தேடி தங்கநகைகள் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.



இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.செல்வம், தமிழச்சி தங்கபாண்டியன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீபெரும்புதூர் கு.செல்வபெருந்தகை,தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் சி.வி.எம்.பி எழிலரசன், திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியகுழு தலைவர் சரஸ்வதிமனோகரன்,  உள்ளிட்ட கூட்டுறவுத்துறை  அதிகாரிகள் உள்ளாட்சி பிரிதிநிதிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். 

முன்னதாக கூட்டுறவுத்துறை காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.லட்சுமி கூட்டுறவு உறுமொழி வாசிக்க கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சியை கூட்டுறவுச்சுறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டனர்.




No comments

Thank you for your comments