சீட்டு கட்டு போல் சரிந்த இரண்டு அடுக்கு மாடி வீடு.....வெள்ளத்தில் அடித்து சென்ற திகில் காட்சி...
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் உள்ள பசுமாத்தூர் கிராமத்தில் பாலாற்று ஓராமாக இளங்கோ என்பவர் சுமார் 50 லட்சம் மதிப்பிட்டில் இரண்டு அடுக்கு மாடி வீட்டு கட்டி வசித்து வந்தார்.
இந்நிலையில் மோர்தானை அனை முழ கொள்ளவு நிரம்பியதால் அதிலிருந்து உபரி நீர திறந்து விடப்படுகிறது. மழைநீர், பாலாற்றுவெள்ளம், மற்றும் மோர் தானா நீர் என அந்த பகுதியில் பெரும் வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டதால் முன் எச்சரிக்கையாக நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் அனுப்பபட்டனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பயந்தார்போல் இரண்டு அடுக்கு மாடி வீடு சீட்டு கட்டு போல் சரிந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காட்சி காண்போரை நெஞ்சம் பதற வைத்து உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முன் எச்சரிக்கை காரனாமான பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
No comments
Thank you for your comments