மாற்றம் தருவது மகளிரே... ஏற்றம் தருவோம் உழைப்பீரே - கருத்தரங்கம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களுக்கு "மாற்றம் தருவது மகளிரே ஏற்றம் தருவோம் உழைப்பீரே" எனும் கருத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்டத் தலைவர் மலைச்சாமி அவர்களின் சீரிய முயற்சியில், ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகத்தரசு அவர்கள் முன்னிலையில், TCTU மாநிலத் துணை தலைவர் ஈரோடு ராஜேந்திரன், மருத்துவர் பிரனேஷ், ஈரோடு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கோதண்டம், துணை தலைவர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் INTUC ஈரோடு மாவட்ட தலைவர் கே. ஆர். தங்கராஜ் அவர்களும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
கோவை மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி பிரிவின் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரசின் சட்டமன்ற தலைவருமான செல்வபெருந்தகை எம் ஏ பி எல் வருகை புரிந்தார். கோவை அரசினர் விடுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநிலத் தலைவி டாக்டர் புவனேஸ்வரி மற்றும் மாநில துணைத் தலைவர் ஈரோடு ராஜேந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியனர்.


No comments
Thank you for your comments