தரை பாலம் மூழ்கி நீர் செல்வதால் போக்கு வரத்து தடை.... மக்கள் அவதி
ஆம்பூர், நவ.8-
ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றில் வெள்ள வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பச்ச குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கு உள்ள தரை பாலம் நீரில் முழுகி உள்ளது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ள பாலத்தை கடந்து சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார் பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைத்து போக்குவரத்து தடை செய்தனர். பொது மக்கள் யாரும் ஆற்றைக் கடக்கும் குளிக்கவும் வேண்டாம் என்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அழிஞ்சிகுப்பம், ரெட்டிமாங்குப்பம் , கொத்தகுப்பம், மேல் வழித்துணையாங் குப்பம், ராஜக்கல்,புதூர்,நாக தோப்பு, மேல்பட்டி கீழ்பட்டி, வளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஷூ மற்றும் தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றது. மேலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments
Thank you for your comments