Breaking News

குடிநீர் தட்டுப்பாடு கிராம மக்கள் அவதி

 தருமபுரி, நவ.9-

அரூரை அருகேயுள்ள நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் அவதியுறுகின்றனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.அக்ராஹரம் ஊராட்சிக்கு உள்பட்டது நெருப்பாண்டகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

அதாவது, எச்.அக்ராஹரம் கூட்டுசாலையில் இருந்து நெருப்பாண்டகுப்பம் கிராமத்துக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சமநிலை நீர்த்தேக்க தொட்டியின் வழியாக நீரேற்றம் செய்யப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கு நாள்தோறும் தேவையான அளவில் குடிநீர் கிடைப்பதில்லை.

குடிநீர் பற்றாக்குறையின் காரணமாக அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.


நெருப்பாண்டகுப்பம் கிராமத்துக்கு தேவையான குடிநீரை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்..

குடிநீர் பற்றாக்குறை காரணமாக மழைக்காலங்களில் வரும் மழைநீர் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் தண்ணீரை பிடித்து பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மழைநீர் மற்றும் திறந்தவெளி கிணறு நீரை பயன்படுத்துவதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சளி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹெச்.அக்ராஹரம் ஊராட்சியில் உள்ள ஆட்டியானூர் வெளாம்பட்டி சோளகொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின்மோட்டார் மூலம் கூட்டுக்குடிநீர் செல்கிறது. 

ஆனால் 500க்கு மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட நெருப்பாண்டாகுப்பம் கிராமத்திற்கு காற்று அழுத்தம் மூலம் செல்வதால் போதிய குடிநீர் இல்லாமல் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் அவதியுற்று வருகின்றனர். மின்மோட்டார் மூலம் நீரை ஏற்றுவது குறித்து  சுமார் பத்தாண்டுகளாக தற்போது வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பபட்டும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் பற்றாக்குறை மட்டுமின்றி கிராமத்திற்கு தேவையான அடிப்படையான சாலை வசதி இரவு விளக்குகள் புணரமைக்கப் படாத மகளிர் சுகாதார வளாகம் தூர்வாரப்படாத ஏரி நீர் நிலைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என்பதே பொதுமக்களின் குறையாக உள்ளது.

மேலும் குடிநீர் பற்றாக்குறை குறித்து தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர் துறை சம்பந்தப்பட்ட அரசு உயர்மட்ட அலுவலர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இலவச தொலைபேசி எண்கள் வாயிலாகவும் பலமுறை புகார் கொடுத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்பதே கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது இதுகுறித்து தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக வைத்துள்ளனர்

எச்.அக்ராஹரம் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வழங்கப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி அருகிலுள்ள விவசாயின் மஞ்சள் கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு பயன்படுத்தப்பட்டு விவசாயம் செய்து வரும் நிலையில் குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி வாழ் மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments