நேரு யுவ கேந்திரா நிறுவன நாளை முன்னிட்டு கண், இரத்த தான முகாம்
நாமக்கல், நவ.15-
நேரு யுவ கேந்திரா நிறுவன நாளை முன்னிட்டு கண் மற்றும் இரத்த தான முகாமினை, பாராளுமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்லை அடுத்த நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேரு யுவ கேந்திரா நிறுவன நாளை முன்னிட்டுமருத்துவமுகாம் நடைபெற்றது. மருத்துவமுகாமினை பாராளுமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் நேரு யுவகேந்திராவின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசுரங்களையும் அவர் வெளியிட்டார். பொதுமக்களிடையே சுகாதாரம், ஆரோக்கியம், நல்வாழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா நிறுவன நாளை முன்னிட்டு இந்த முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் பிரிஜோஸ்கௌசிக், கணக்கு மற்றும் நிகழ்ச்சி அலுவலர் முனைவர் வள்ளுவன், இளையோர் நிகழ்ச்சி மாவட்ட வழிகாட்டு குழு உறுப்பினர் மணிகண்டன், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
No comments
Thank you for your comments