Breaking News

ஓயாமல் தொடரும் ‘ஜெய் பீம்’ சர்ச்சை : பாமகவை அடுத்து ராஜாகண்ணுவின் முதனை கிராம மக்கள்

விருத்தாசலம்:

படத்தின் தயாரிப்பாளர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை நடிகர் சூர்யா முன் வைத்தார். இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட சூர்யா, “படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து, நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு, 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து, சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  திரைப்பட இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து  நேற்று விளக்கம் அறிக்கை வெளியிட்டார், அதில்  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஜெய்பீம் திரைப்படத்தின் ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இதன் பொருட்டு மன உளைச்சல் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார்.

இந்நிலையில், கடலூரில் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்த ராசா கண்ணுவை கம்மாபுரம் காவல்துறையினர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை மையமாக வைத்து “ஜெய் பீம்” திரைப்படம் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழும் முதனை கிராமத்தில் சாதிய வன்மத்தோடு ஒரு சாதியை மட்டும் தவறாக காட்சிப்படுத்தி இருப்பதாக கூறி அந்த கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஏற்கனவே ஜெய் பீம் பட காட்சிகளில் வன்னரியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது கிராம மக்கள் போராட்டத்தில் களமிறிங்கியுள்ளது படக்குழுவினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments