Breaking News

வேலூரில் நடிகர் சூர்யா ஜோதிகாவை கைது செய்ய கோரி புகார் மனு

வேலூர், நவ.22-

வேலூர் மாவட்டம் காட்பாடி டி.எஸ்.பி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட பா.ம.க  சார்பில் மாவட்ட துணை செயலாளர் அசோக்குமார் தலைமையில் புகார் மனு  அளிக்கப்பட்டது.

அம்மனுவில், நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான 1995 ஆம் ஆண்டு காலண்டரில் அக்கினி கலத்தை காட்சிப்படுத்தி வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தி ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தை ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்சி படுத்தப்பட்டுள்ளது. 

இருளர் மற்றும்  வன்னியர் சமுதாயத்திற்கிடையே ஜாதி வன்மத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக திரைப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் நடிகை ஜோதிகா&சூர்யா, இயக்குநர் ஞானவேல் நடிகர் சூர்யா ஆகியோர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் பாமக வை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டர்

💮💮💮💮💮💮💮



வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பகுதியில் உள்ள கசம் ஆதரவற்ற மாணவர்கள் தங்கும் விடுதியில் காலம் சென்ற தெய்வத்திரு சிவபாதம் அவர்களின் ஆறாம் வருட நினைவு நாளை முன்னிட்டு எம்.ஸ்ரீராம் என்கிற அப்பு மதிய உணவு வழங்கினார். உணவு வழங்கிய எம். ஸ்ரீராம் என்கிற அப்புக்கு அனைத்து மாணவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்


No comments

Thank you for your comments